games

img

ரூர்கேலாவில் நாட்டின் மிகப்பெரிய  ஹாக்கி  மைதானத்திற்கு அடிக்கல்....

புவனேஸ்வர்:
ரூர்கேலாவில் மிகப்பெரிய ஹாக்கி மைதானத் திற்கு ஒடிசா முதல்வர் நவீன்பட்நாயக் அடிக்கல்  நாட்டி னார்.  

ஒடிசா பகுதியில் வசித்து வந்த பழங்குடியினரின் முக்கிய விளையாட்டாக ஹாக்கி இருந்தது.  இதல் ஒடிசாவில் ஹாக்கி விளையாட்டு மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது. ஒடிசா  தலைநகர் புவனேஸ்வரில் கலிங்கா ஹாக்கி மைதானம் அமைந்துள்ளது.இதற்கிடையே, ஒடிசாவின் ரூர்கேலா பகுதியின் சுந்தர்கர் என்ற இடத்தில் இந்தியாவின் மிகப் பெரிய ஹாக்கி  மைதானம் அமைக்கப்படும் என்று ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்திருந்தார். 

அதன்படி பிப்ரவரி 16 செவ்வாயன்று ரூர்கேலாவில் மிகப் பெரிய ஹாக்கி மைதானம் அமைக்கும் பணிக்கு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்  அடிக்கல் நாட்டினார். இந்த மைதானம் 20 ஆயிரம் பேர் அமர்ந்து ஹாக்கி போட்டியை நேரில் பார்க்கும்  வகையில் கட்டப்பட உள்ளது. இது இந்தியாவிலேயே மிகப் பெரிய ஹாக்கி மைதானமாக  அமையவுள்ளது.  2023 ஆம் ஆண்டில் புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலாவில் ஆண்கள்  உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டி நடைபெறுகிறது.

;